அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், அடுத்த 2 நாட்களில் பருவமழை இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தென் இந்தியாவில் தொடங்கும் என வானிலை துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.