states

img

'தி கேரளா ஸ்டோரி 2': கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது - கேரள உயர்நீதிமன்றம்

'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கண்ணூர் மாவட்டம் சித்தரிபரம்பாவைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், கேரள மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்; ஆனால், 'கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், கலை சுதந்திரமானது; ஆனால், 'உண்மை சம்பவம்' என்று குறிப்பிட்டு கேரளா என்ற பெயரை பயன்படுத்துவது வகுப்புவாத பதற்றங்களை தூண்டும் வகையில் உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, படத்தின் டீசர்களை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.