திருவனந்தபுரத்திலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக செல்லும் அம்ரிதா விரைவு ரயில் இராமேஸ்வரம் வரை செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அவர்களிடம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தென்னக ரயில்வேயில் மேற்கொள்ள வேண்டிய புதிய ரயில் சேவைகள், சுரங்கப்பாதை திட்டம், ரயில்வே மேம்பால திட்டம், புதிய ரயில் நிறுத்தங்கள், நிலுவையில் உள்ள பணிகள், புதிய ரயில் தடம் அமைத்தல், ரயில் நிலையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கடிதம் மூலமாக வலியுறுத்தினார்.
அதில், கோயம்புத்தூரிலிருந்து, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக செல்லும் அம்ரிதா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.