districts

img

என்டிசி பஞ்சாலை தொழிலாளிகளுக்கு நிலுவை சம்பளத்தை விடுவிக்க உறுதி!

என்டிசி பஞ்சாலை தொழிலாளிகளுக்கு நிலுவை சம்பளத்தை விடுவிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கடந்த 8 மாதகால ஊதியத்தை விடுவிக்க கோரி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி ஆகியோர் இணைந்து ஜவுளித்துறை செயலாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய தொகையில் வேலையில் இருப்பவர்களுக்கு 25 சதவிகிதமும், வேலையில் இல்லாதவர்களுக்கு 12.5 சதவிகிதம் சம்பளம் கொடுக்க ஒத்துக்கொண்டுள்ளனர்.