states

img

ம.பி: மாணவிகள் உடை மாற்றுவதை படம்பிடித்த ஏபிவிபி தலைவர்கள் கைது!

மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை படம்பிடித்த ஏபிவிபி தலைவர்கள் 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியில் நடைபெற்ற் இளைஞர்கள் திருவிழாபோது, கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை வென்டிலேட்டர் வழியாக ஏபிவிபி உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணை தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோர் படம்பிடித்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகள், அக்கல்லூரி முதல்வர் ப்ரீத்தி சர்மாவிடம் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து, முதல்வர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது மாணவிகள் உடை மாற்றுவதை படம்பிடித்த ஏபிவிபி தலைவர்கள் படம்பிடித்தது உறுதியனது.
இதனை தொடர்ந்து பன்புரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஏபிவிபி தலைவர்கள் 3 பேர் மீது பி.என்.எஸ் 77 மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர் தலைவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட மொபைல் போன்களில் இதுபோன்ற வீடியோக்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய உள்ளூர் போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.