பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
இ-20 பெட்ரோல் கொள்கை தவறானது. இம்முடிவை எடுக்கும் முன், எத்தனால் உற்பத்திக்குத் தேவைப்படும் நீர் ஆதாரம், விவசாயத்தில் தாக்கம் அல்லது வாகனங்களின் செயல்திறன், அதற்கான செலவு உள்ளிட்ட நன்மை-தீமைகள் பற்றிய விரிவான சமூக பகுப்பாய்வு எதுவும் அரசாங்கத்தால் செய்யப்படவில்லை.
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே
வாக்காளர் நீக்கம் குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதிலளிக்கவில்லை. வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படாதவரை, தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்தக் கூடாது.
அரசியல் நையாண்டி கலைஞர் குணால் கம்ரா
அன்று ஹிட்லரையும் முசோலினியையும் ஆதர்ஷ நாயகர்களாக பார்த்தவர்கள் இப்போது தலிபான்களை ஆதரிக்கிறார்கள்.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்
ஒவ்வொரு வருடமும், கிட்டத்தட்ட ஒரே கதைதான்; குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ‘பசுமை’ பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை யார் அமல்படுத்தப் போகிறார்கள்? திறம்பட அமல்படுத்தப்படாவிட்டால் எந்த தடையும் வேலை செய்யாது என்பதை உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்கள் எப்போது உணரும்?