states

img

தலைநகர் பல்கலை.யில் மாணவிக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை “நாட்டுக்கே அவமானம்”

தலைநகர் பல்கலை.யில் மாணவிக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை  நாட்டுக்கே அவமானம் 

புதுதில்லி தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த கும்பல் பாலியல் வன்கொடுமை நாட்டுக்கே அவமானம் என இந்திய மாணவர் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் பிற்போக்குத்தன மான கருத்துக்கும் கண்டனம் தெரிவித்துள் ளது.  தில்லியில் தெற்காசியப் பல்கலைக்கழ கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மாணவி ஒருவர் பல்கலை வளாகத்திற்குள்ளேயே நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இந்தச் சம்பவம் திங்கட்கிழமை தான் தெரியவந்தது. முன்னதாக மாணவி காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில் படுகாயங்க ளுடன் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்டார். இதன் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பிறகு காவல் துறை தரப்பு விசாரணை மேற்கொண்டது. எனினும் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் மாணவர்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவா ளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தினர்.   இது குறித்து இந்திய மாணவர் சங்க மத்திய செயற்குழு சார்பில் தலைவர் ஆதர்ஷ் எம் சஜி, பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சாரி யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  இந்த கொடூரமான சம்பவத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். குற்றவாளிக ளை விரைவாக கைது செய்ய வேண்டும் என தில்லி காவல் துறைக்கும்ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறோம். பாதிக்கப்பட்டவருக்கு எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வது டன், அவர் விரைவில்குணமடைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்க ளுக்கும் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்கள் வழங்குவதற்காக  தெற்காசியப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தலைநகர் தில்லியில், இது போன்ற ஒரு சர்வதேசப் பல்கலைக்கழ கத்தின் வளாகத்திற்குள் இவ்வளவு கொடூர மான குற்றம் நடந்திருப்பது நம் நாட்டிற்கே அவ மானமாகும். இந்தக் கொடூரமான குற்றத்தி ற்குப் பல்கலைக்கழக நிர்வாகமும், ஒன்றிய அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜனநாயக விரோதப் போக்கும் பாதுகாப்பின்மையும் பாஜக அரசின் தயவுடன் செயல்படும் பல்க லைக்கழக நிர்வாகம், கல்வி வளாகத்திற்குள் மாணவர்களின் ஜனநாயகக் குரல்களை அடக்குவதில் பெயர் பெற்றுள்ளது. மாணவர் கள் வளாகத்திற்குள் ஒன்றிணைய முயன்றபோ தெல்லாம், பல்கலை நிர்வாகம் மாணவர் விரோத நடவடிக்கைகளால் அவர்களை அடக்க முயன்றது. மாணவர்களுக்கு அவர்களின் உரி மைகளையும் சுதந்திரத்தையும் கொடுத்து, அவர்களை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பல்கலைக்கழக நிர்வாகம் ஜனநாயகத்தை மறுத்து, மாணவர்களை வெறும் கீழ் நிலை யில் உள்ளவர்களாக கருதி அடக்கி ஆள முயற்சித்தால், அந்தக் கட்டுப்பாடான சூழல் உடைந்து, இறுதியாக வளாகத்தில் ஒரு கடுமை யான குழப்பமும் அமைதியின்மையும் தான் ஏற் படும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய சூழ்நிலைக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் ஒன்றிய அரசுமே நேரடிப் பொறுப்பாகும். நாடு முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள் ளன. கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலைச் சம்பவம் நடந்த ஓர் ஆண்டுக்குள்ளாகவே நம்நாட்டில் பெண்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து பல செய்தி கள் வெளிவந்துள்ளன. நாட்டில் பெண்களு க்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி வரு வது மிகவும் வெட்கக்கேடானது. இது சட்டம் ஒழுங்கு தோல்வியாகும். மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் ஜனநாயகமற்ற சூழலின் விளை வாகும். இதற்கு ஒன்றிய அரசே நேரடிப் பொறுப்பாகும். பாஜக-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி,  பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வ தில் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. ஏற்கெனவே பல வழக்குகளில் நாம் பார்த்தது போல, அவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக் கவே முயற்சி செய்துள்ளனர் என அவ் வறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.  இந்திய மாணவர் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்தக் கொடூரமான குற்றத்தை முறையான விசாரணைக்கு உட்படுத்தி, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. மேலும், ஒன்றிய அரசும், பல்கலைக்கழக நிர்வாக மும், மாணவர் விரோத நடவடிக்கைகளால் அச்சுறுத்தி, அவர்களின் அதிகாரத்தையும் உரிமைகளையும் பறிக்கும் முயற்சிக ளிலிருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மம்தா பானர்ஜியின் பிற்போக்குத்தனமான கருத்து மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரமான சம்பவமும் நடந்துள்ளது. இதுவும் சட்டம் ஒழுங்கு தோல்வி தான். இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, மேற்கு வங்க முதல்வர், “பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது” என்று தவறான வாதத்தை முன்வைத்து பிற்போக்குத்தனமான மற்றும் பாதிக்கப்பட்டவரின் வலியை புரிந்துகொள்ளாமல் ஒரு  கருத்தைத் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க, பாதிக்கப்பட்டவர் மீது பழியைச் சுமத்திய அவரது கருத்து ஏற்றுக்கொள்ள முடி யாதது.  மே.வங்க முதல்வரின் கருத்தானது பெண்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்து வைக்க விரும்பும் பழமைவாத, பிற்போக்குத் தனமான ஆசையை எதிரொலிக்கிறது.  இந்த குற்றமானது பெண்களின் சுதந்தி ரத்தின் மீது அல்ல. மாறாக குற்றம் செய்த குற்றவாளிகள் மீதும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிய அரசின் மீதும் மட்டுமே உள்ளது என்று இந்திய மாணவர் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. பெண்களை குற்றம் சாட்டுகிற  இந்தப் பிற்போக்கு மனநிலைக்கு எதிராக நாங்கள் தீவிரமாகப் போராடி வருகி றோம். இரவு பகல் என அனைத்து நேரங்களி லும் பெண்களின் முழுமையான சுதந்திரத்தை யும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, நீதி மற்றும் கண்ணியத்தை நிலைநாட்ட அரசாங்கங் கள் உடனடியான, உறுதியான நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தலிபான்கள் போன்ற பிற்போக்குத்தனமான பெண்கள் வெறுப்புக் குழுக்களை இந்தியாவில் வரவேற்கும் இந்த இருண்ட நேரத்தில், ஒவ் வொரு மாணவரும், ஒவ்வொரு குடிமகனும் மற்றும் ஒவ்வொரு முற்போக்கு சக்தியையும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என அழைக்கிறோம். பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பின்னோக்கிக் கொண்டு செல்ல நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.