தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை குடும்பத்தினருக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
உயர் அதிகாரிகளின் சாதிய பாகு பாட்டால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் குடுபத்தினரை சந்தித்து சிபிஎம் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஒய்.பூரன் குமார். மாநில டிஜிபி சத்ருஜீத் கபூர், முன்னாள் எஸ்பி நேரேந்திர பிஜர்னியா உள்ளிட்ட 8 உயரதிகாரிகள் தன்னை சாதி ரீதியான பாகுபாட்டுடன் நடத்திய தாகவும் அதன் மூலம் தனக்கு மன உளைச்சலை உருவாக்கியதாகவும் தற்கொலைக்கு முன் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள பூரன் குமாரின் மனைவியும் தனது கணவரின் தற்கொலைக்கு உயரதிகாரிகளின் சாதிய பாகுபாடும், அவர்கள் கொடுத்த மன உளைச்சலுமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி. ரகுவுலு, சிபிஎம் ஹரியானா மாநில செய லாளர் பிரேம் சந்த், முன்னாள் மாநில செய லாளர் இந்தர்ஜித் சிங், சிபிஎம் பஞ்சாப் மாநில செயலாளர் ஆர்.எல். மௌத்கில் ஆகியோர் அடங்கிய குழு பூரன் குமார் அவர்களின் மனைவியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்திற் கான நீதியைப் பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் எனவும் தெரிவித்துள்ளனர். பூரன் குமார் வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) சந்தீப் குமாரும் தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், அவர் மூன்று பக்க கடிதம் மற்றும் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். தனது கடிதத்தில், “உண்மைக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன். நேர்மையின் பக்கம் நின்றதில் நான் பெருமை கொள்கி றேன். தேசத்தை விழிப்படையச் செய்ய இது தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.