tamilnadu

img

படைப்பாளுமைகளுக்கு தமுஎகச கலை இலக்கிய விருது

படைப்பாளுமைகளுக்கு  தமுஎகச கலை இலக்கிய விருது

காஞ்சிபுரம், அக்.15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தமிழ் மாநிலக்குழு சார்பாக 2024ஆம் ஆண்டுக் கான கலை இலக்கிய விருது விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலை மையில் நடைபெற்ற இந் நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கு.ஆறுமுகம் வரவேற்றார்.  மாநில பொதுச்செய லாளர் ஆதவன்தீட்சண்யா பாராட்டுரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் மயிலைபாலு, மாநிலத் துணைத் தலைவர் மற்றும் திரைக் கலைஞர் ரோகிணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வை மாநில துணைப் பொதுச் செயலா ளர்களான பாடகர் உமா அமர்நாத், ஓவியக்கவிஞர் வெண்புறா, களப்பிரன் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். முன்னதாக விருதாளர் களுக்கு பட்டு மாலை யிட்டு, தமுஎகச செங்கைப் போர் பறையின் பறையிசை யோடும், ம.இராஜசேகரன் தெருக்கூத்து கலையாட் டத்தோடும் கலை இலக்கிய பேரணி நடைபெற்றது. ஆட்டம், பாட்டம் என உணர்வுப்பூர்வமாகவும் கலைப் பேரணி நடை பெற்றது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ் நாள் பங்களிப்புச் செய்த  ஆளுமைக்கான கு.சின்னப்ப பாரதி அறக் கட்டளை விருது மூத்த வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதனுக்கு வழங்கப்பட்டது. அவரது ஆளுமை குறித்து மாநிலப் பொருளாளர், கவிஞர் சைதை ஜெ தொகுத்து வழங்கினார். பெண் படைப்பாளு மைக்கான மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது கவிஞர் சுகிர்த ராணிக்கும், சிறுகதைத் தொகுப்புக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது  சால்ட் வெளியீட்டில் வந்த செந்நிலம் சிறுகதை எழுதிய ஜெயராணிக்கும், தொன்மைசார் நூலுக்கான கே.முத்தையா நினைவு விருது சிந்தன் புக்ஸ் வெளி யீட்டில் வந்த ஆதிதிராவிட மித்திரன் அறியப்படாத அரசியல் ஆயுதம் நூலை எழுதிய ப.குமாருக்கும் வழங்கப்பட்டது. விளிம்பு நிலை மக்கள் குறித்தப் படைப்புக்கான சு.சமுத்திரம் நினைவு விருது வேரல் பதிப்பகம் வெளி யீட்டில் வந்த ஊத்தாம் பல்லா நூலின் ஆசிரியர் செஞ்சி தமிழினியனுக்கும், கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சை யப்பன் செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது தமிழ்வெளி வெளி யீட்டில் வந்த மலைச்சி நூல் எழுதிய நந்தன் கனக ராஜுக்கும், நாவலுக்கான கே.பி.பாலசந்தர் நினைவு விருது சால்ட் வெளியீட்டில் வந்த அல்லிமுலை ஆனை மாடன் என்ற நாவலை எழுதிய கு.கு.விக்டர் பிரின்ஸுக்கும், அல்புனை வுக்கான இரா.நாகசுந்தரம் நினைவு விருது விகடன் பிரசுரம் வெளியீட்டில் வந்த மாஞ்சோலை 1349/2 எனும் நான் என்ற நூலை எழுதிய வழக்குரைஞர் இ.இராபர்ட் சந்திரகுமாருக்கும் வழங் கப்பட்டது. மொழிபெயர்ப்பு நூலுக் கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது அணங்கு வெளியீட்டில் வந்த சீதா யணம் வங்காள நாவல் எழுதிய ஞா.சத்தீஸ்வர னுக்கும், குழந்தைகள் இலக்கிய நூலுக்கான இராஜபாளையம் மணி மேகலை மன்றம் (கொ.மா.கோதண்டம்) நினைவு விருது எதிர் வெளியீட்டில் வந்த காட்டுக்குள்ளே ஒரு  பள்ளிக்கூடம் நூலை எழுதிய குருங்குளம் முத்துராஜாவுக்கும், அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூலுக்கான மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீட்டில் வந்த அசிமவ்வின் தோழர்கள் நூலை எழுதிய ஆயிஷா.இரா.நடராசனுக்கும், மொழி  வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது தேநீர் பதிப்பகம் வெளி யீட்டில் வந்த சங்கத் தமிழ்ச்  சொற்கள் நூலின் ஆசிரியர் பி.பாலசுப்பிரமணிய னுக்கும் வழங்கப்பட்டது. ஆவணப்படத்திற்கான என்.பி.நல்லசிவம் நினைவு விருது மாஞ்சோலை நிகழ்வு ஆவணப்படமாக எடுத்த மைக்காக இயக்குநர் சாமு வேல் அற்புதராஜுக்கும், அமரர் மு.சி.கருப்பையா பாரதி ஆனந்த சரஸ்வதி நினைவு விருது நாட்டுப்புறக் கலைச் சுடர் சி.சேகருக்கும் (மண் மத்தளக் கலைஞர் கடவுமத்தாட்டம்), கருப்பு கருணா நினைவு விருது நுண்கலைச் சுடர் சிற்பி  இராஜனுக்கும், எழுத்தாள ரின் முதல் நூலுக்கான எழு த்தாளர் ஜனநேசன் நினைவு விருது அறம் வெளியீட்டில் வந்த தொரசாமி நாவல் எழுதிய ஜெ.அன்புவுக்கும், குறும்படத்திற்கான பா.இரா மச்சந்திரன் நினைவு விருது விஸ்பர்ஸ் ஆஃப் எ மான்சூன் என்ற குறும் படத்தை இயக்கிய இயக்கு நர் ஆதித்யா ஆருக்கும், த.பரசுராமன் நினைவு விருது நாடகக் சுடர் கருஞ்சுழி ஆறுமுகத்திற்கும், மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது இசைச் சுடர் மக்களிசைப் பாடகர் அன்பு மணிக்கும் வழங்கப்பட்டது.