weather

img

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் நவம்பர் 19-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கையில், வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.