வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு ஒன்ரிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த இனி மொபைல் போனில், செயலிகளுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடை ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை விதித்துள்ளது.
சிம் கார்டு இல்லாமலோ அல்லது செயலிழந்த சிம் கார்டை வைத்தோ இந்த செயலிகளை பயன்படுத்த முடியாத வகையிலும், வெப் வெர்ஷனில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த செயலிகள் தனாகவே Logout ஆகும் வகையிலும் மாற்றங்களை கொண்டுவர தகவல் பரிமாற்ற செயலிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டுபாடுகள் மூலம் இதன் மூலம் சைபர் குற்றங்களை தடுக்கப்படும் என்றும், இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்த, நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
