states

img

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்

கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் கும்பல் அட்டூழியம் : மாநிலம் முழுவதும் போராட்டம்

கண்ணூர் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி ஆட்சி நடை பெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்தியாவில் மட்டு மின்றி தெற்கு ஆசியாவிலேயே சுகாதா ரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமாக கேரளம் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் (பெண்) மீது அம்மாநில எதிர்க்கட்சி யான காங்கிரஸின் மாணவர் பிரிவு (கேஎஸ்யு) கும்பல் கொடுரத் தாக்குதல் நடத்தி யுள்ளது. புதனன்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூர் மாவட்டத்தில் கல்யாத் சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்க வந்தார். நிகழ்ச்சி முடிந்து திரு வனந்தபுரம் திரும்ப கண்ணூர் ரயில் நிலை யம் வந்தார். அமைச்சருக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில், காங்கிரஸ் கும்பல் வீணா ஜார்ஜ் மீது திடீரென தாக்கு தல் நடத்தியது. காவல்துறையின் உதவியால் அமைச்சர் வீணா ஜார்ஜ் நூலிழையில் உயிர் தப்பினார். எனினும் இந்த தாக்குதலில் அமைச்சரின் கழுத்து, காதுக்கு பின்புறம் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டன. சிறிது நேரம் கண்ணூர்  ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஓய்வு எடுத்தார். வலது பக்க கழுத்தில் கடும் வலியை உணர்ந்த தால், அவரால் பயணத்தைத் தொடர முடிய வில்லை. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டதை அறிந்த கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக கண்ணூ ருக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீணா ஜார்ஜிடம் நலம்  விசாரித்தனர். கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட தையடுத்து அமைச்சர் வீணா ஜார்ஜ், தற்போது கண்ணூர் பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். பினராயி விஜயன் எச்சரிக்கை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,”பெண் என்று கூட பாராமல் அமைச்சர் மீதான இந்தத் தாக்குதல் காங்கிரஸின் தரம் தாழ்ந்த அரசி யலைப் பிரதிபலிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது ஒரு நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவிலேயே கேரளம் சிறந்த பொது சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை, அனைத்து அரசு அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன. அப்படி யிருக்க, சில சம்பவங்களை மிகைப்படுத்தி, அதில் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு பெண் அமைச்சர் மீது தாக்குதல் நடத்துவது அரசியலே அல்ல; அது அரசியலின் சீர்கேடு. இது பெண்களுக்கு எதிரான தாக்குதல். இளை யோர் காங்கிரஸ் மற்றும் மாணவர் (கேஎஸ்யு)  அமைப்பினரைத் தூண்டிவிட்டு வன்முறை யைப் பரப்ப காங்கிரஸ் தலைமை முயல்கிறது.  மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க லாம் என்று அவர்கள் நினைக்க வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்தனர். எம்.வி. கோவிந்தன் கண்டனம் சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில்,”ஒரு பெண் அமைச்சர் மீது இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகை யில் கொடூரமான தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. மலர்வளையம் (ஈமச்சக்கரம்) வைப்பது, கொலை மிரட்டல் விடுப்பது எனத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இது காங்கிரஸ் தலைமைக்கு தெரிந்தேதான் நடந்துள்ளது” என கண்டனம் தெரிவித்தார். கைது கேரள அரசியல் வரலாற்றிலேயே ஒரு பெண் அமைச்சர் உடல்ரீதியாகத் தாக்கப்படு வது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எம்.சி. அதுல், வி.வி. அக்சய், பிதுல் பாலன், சி.எச். முபாஸ், அகமது யாசின் ஆகிய 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாணவர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆவர். முன்னதாக, சனிக்கிழமை இளைஞர் காங்கிரஸ் கும்பல் அமைச்சர் வீணா ஜார்ஜின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் (திரு வனந்தபுரம்) கதவை உடைத்து, கதவிற்கு முன்பு ஈமச்சக்கரத்தை (மலர்வளையம்) வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் போராட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து, கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் தங்களது கிளைகளுக்கு அழைப்பு விடுத்தன. இதனால் வியாழனன்று கேரளம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.