tamilnadu

img

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ்!

திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் ஐயப்பன் இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவரும், தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2022-ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சட்டப் போராட்டம் மேற்கொண்டபோதும், ஓபிஎஸ்ஸுக்கு  பலனளிக்கவில்லை. இந்த சூழலில், அண்மை காலமாக ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு அதரவு தெரிவித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். மேலும், அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இதை தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் ஐயப்பன் இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.