headlines

img

செவ்வணக்கம் தோழர் நல்லகண்ணு!

செவ்வணக்கம் தோழர் நல்லகண்ணு!

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பேரா ளுமை, விடுதலைப் போராட்ட வீரர், தகை சால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணு (101) அவர்களின் மறைவு, தமிழக அரசியலுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் இடதுசாரி இயக் கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஒரு நூற்றாண்டு காலப் பொதுவாழ்வில் தூய்மை, எளிமை, மற்றும் சமரசமற்ற போராட்டக் குணத்திற்கு அடையாளமாகத் திகழ்ந்த அந்தத் தியாகச் சுடர் அணைந்துவிட்டது.

ஸ்ரீவைகுண்டத்தின் வசதியான விவசாயக்  குடும்பத்தில் பிறந்த தோழர், பாரதியின் பாடல்க ளால் ஈர்க்கப்பட்டுத் தனது 15-வது வயதிலேயே சுதந்திரக் கனலைத் தெருத்தெருவாகப் பரப்பி யவர். காந்தியவாதியாகத் தொடங்கி, மார்க்சி யத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுத் தன் இறுதி மூச்சு வரை செங்கொடி ஏந்தி நின்றவர். நெல்லைச் சதி வழக்கில் போலீசாரின் கொடும் சித்ரவதை களை எதிர்கொண்டு, சிறைவாசத்தையும் தலை மறைவு வாழ்க்கையையும் இன்முகத்தோடு ஏற்றவர்.

கவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் அவர் ஆற்றியப் பணிகள் மகத்தானவை. குறிப்பாக, நில உரி மைப் போராட்டங்களிலும், தாமிரபரணி மணல் கொள்ளைக்கு எதிரான சட்டப் போராட்டத்தி லும் அவர் காட்டிய உறுதி சமகாலப் போராளி களுக்குப் பாடம். தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் வெடித்தபோது, தனது மாமனாரே கொல்லப்பட்ட நிலையிலும், “சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளி யாக்க முடியாது” என்று சமூக அமைதி காத்த  அவரது பண்பு, ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் உயரிய அறத்திற்குச் சான்று.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தா னத் தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்களி டம் ஆழமான தோழமை கொண்டிருந்த அவர், தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப் படுத்துவதில் முதன்மையான பங்காற்றியவர். சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட் டங்களில் தோளோடு தோள் நின்று களம் கண்டவர். தமக்குக் கிடைத்த ‘தகைசால் தமிழர்’ விருதுத் தொகையான 10 லட்சம் ரூபாயை யும், அதனுடன் தனது சொந்தப் பணம் 5000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கே வழங்கியத் தன்னலமற்றத் தியாகி அவர்.

அரசியல் பாகுபாடுகளைக் கடந்து ஒட்டு மொத்தத் தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட அந்தப் புரட்சியாளரின் மறைவுக்கு உழைப்பாளி மக்களின் போராட்ட நெருப்பாம் ‘தீக்கதிர்’ நாளிதழ் தனது செவ்வணக்கத்தைச் செலுத்து கிறது.  தோழர் நல்லகண்ணு விட்டுச் சென்ற போராட்டப் பாதையும், அவர் வாழ்ந்த புரட்சிகர அறவாழ்வும் எக்காலத்திற்கும் நமக்கு வழிகாட்டும்.

பிரியாவிடை அளிக்கிறோம், தோழர்! உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.