மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன காப்பகப் பகுதியில் பொறுப்பு மேயர் ஆய்வு
மதுரை, பிப்.26- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள வாகன காப் பகம் மற்றும் கலாச்சார பொருட் கள் விற்பனை மையப் பகுதிகளில் மாநகராட்சி மேயர் (பொ) தி.நாக ராஜன் வியாழக்கிழமை அதிகாரி களுடன் நேரில் ஆய்வு மேற்கொண் டார். மதுரை மாநகராட்சி 52வது வார் டில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் இயங்கும் வாடகை கார் மற்றும் வேன் ஓட்டு நர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்த இடவசதி ஏற் படுத்த வேண்டும் என்றும், ஓய்வு எடுக்க தனி அறை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, வாகன காப்பகப் பகுதியில் ஓட்டுநர்களுக் கான ஓய்வு அறை கட்டவும், ஒப் பந்ததாரர் மூலம் வாடகை வாக னங்களுக்கு தனி பகுதி ஒதுக்கி நிறுத்த வசதி செய்யவும் மேயர் உத்தரவிட்டார். மேலும், மாத வாடகை வாகனங்களை இரண் டாம் தளத்தில் நிறுத்தவும், பக்தர் கள் வரும் வாகனங்களுக்கு முதல் தளத்தில் முன்னுரிமை வழங்கி நிறுத்த ஏற்பாடு செய்யவும் அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். கோவிலை சுற்றியுள்ள மாநக ராட்சி கழிப்பறைகள் தற்போது மாலை 7.30 மணிக்கே மூடப்படுவ தாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அவற்றை இரவு 10 மணி வரை திறந்துவைத்து செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழிப்பறை ஒப்பந்ததாரர் களுக்கும் அதிகாரிகளுக்கும் மேயர் உத்தரவிட்டார். மேலும், கலாச்சார பொருட் கள் விற்பனை மையத்தின் மையப் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதாக வந்த புகாரை பரிசீலித்த மேயர், மழை நீர் வெளியேற தேவையான வடி கால் வசதிகளை உடனடியாக ஏற் படுத்த அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். வெளியூரிலிருந்து வரும் வாக னங்களுக்கு உள்ளே நிறுத்த இட மில்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பும் நிலை தொடர்வ தாக கூறப்பட்ட நிலையில், வாக னங்களை முறையாக ஒழுங்கு படுத்தி நிறுத்த ஏற்பாடு செய்ய வும், வெளியூரிலிருந்து வரும் வாக னங்களுக்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறி வுறுத்தினார். இந்த ஆய்வின்போது அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன், மாநகராட்சி அதிகாரி கள், வாடகை வாகன ஓட்டு நர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் பி.கோபிநாத், பகுதி குழு உறுப்பி னர் சதுரகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
