states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள சட்டமன்ற சபாநாயகர் ஏ.என்.சம்சீர்

வீணா ஜார்ஜ் தாக்கப்பட்ட பொழுது நானும் ரயில் நிலையத்தில் இருந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரை, அதுவும் ஒரு பெண் அமைச்சரை பொது இடத்தில் வைத்து இப்படி உடல்ரீதியாகத் துன்புறுத்தி, தாக்குதல் நடத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது

கர்நாடக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி வெளிநாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது பற்றிப் பேசுகிறார். ஆனால் இங்கே அவரது குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். 

மூத்த பத்திரிகையாளர் தயான் சங்கர்

அசாமில் நேருவின் சிலை புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ‘இந்தியாவின் அடையாளமாக’ இருந்தவர் மீது அசாம் முதலமைச்சர் நேரடித் தாக்குதல் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் அசாம் முதலமைச்சருக்கு மட்டும் இவ்வளவு அளவற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது, இது ஏன்?

மூத்த பத்திரிகையாளர் ரன் விஜய் சிங்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் பெயர் அழைக்கப்பட்ட போது, எதிர்க்கட்சியினர் வெளியேறிவிட்டனர். இஸ்ரேல் செய்தியாளர்கள் எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகள் என்று சொல்லவில்லை. இதே விஷயம் நம் நாட்டில் நடந்திருந்தால், இந்நேரம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள். நாட்டின் பிம்பத்தை கெடுத்துவிட்டார்கள் என்று கத்திக் கொண்டிருப்பார்கள்.