states

ஸ்கேன் இந்தியா

காலம் கடத்தல்

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களையே நியமிக்கா மல் காலம் கடத்தி வருகிறார்கள். நீதித்துறையைச் சேர்ந்தவர் கள் 10 முதல் 20 பேர் மற்றும் நிபுணர்கள் 10 முதல் 20  பேர் என்று தீர்ப்பாயத்தில் உறுப்பி னர்களாக இருக்கலாம். குறைந்த பட்சம் 20 பேர் இருக்க வேண்டும். ஆனால், பத்து பேர்தான் தற் போது இருக்கிறார்கள். அது மட்டு மல்ல, நிபுணர்கள் என்ற பெயரில் நியமிக்கப்படுபவர்களில் பெரும் பாலானோர் அரசுத்துறைகளில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி களாகவே இருக்கிறார்கள். சுற்றுச் சூழல் அனுமதி மறுப்புக்கு எதிரான வழக்குகளில் பெரும்பாலும் பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் உள்ளன. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே இந்த செயல் பாடுகள் குலைக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.

புத்தகம் மீட்டல்

எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது என்று எழுதிவிட்டு, தற்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உடனடியாகக் கண்டித்துவிட்டார். ஆன்லைனில் விற்பனை தொடங்கிவிட்டது. என்ன செய்வது என்று யோசித்தனர். முதலில் விற்பனையை நிறுத்தி னார்கள். “சரி.. ஏற்கனவே விற்பனையாகி விட்டதே.. என்ன செய்வது” என்று முழித்திருக்கிறார்கள். எவ்வ ளவு பேர் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தால், எண்ணிக்கை 38 என்று காட்டுகிறது. 16 பேரைப் பிடித்து திரும்ப வாங்கிவிட்டார்கள். சிலரின் தொடர்பு எண் இல்லை. அவர்கள் எந்தக் கணக்கில் இருந்து செலுத்தியுள்ளார்கள் என்று பார்த்து, அந்த வங்கியைத் தொடர்பு கொண்டு, எண் வாங்கி.. என்று பரபரப்பாக இருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறையிலும் இந்த அதிகாரிகள் வியர்வை மழையில் நனைகிறார்களாம்.

கொரோனா விரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் பகுதியில் இஸ்லாமியப் பெண்களுக்கு கம்பளிகள் தர மறுத்த பாஜக தலைவர் சுக்பீர் சிங், மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்கத் தொடங்கி யுள்ளார். கொரோனா காலத்தில் இவர் என்ன செய்தார் என்ன தெரியுமா என்று தெரு முனைக ளில் நின்று பேசிக் கலாய்க்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் மண்குளியல் செய்தால் கொரோனா வராது என்று அவர் போட்ட வீடியோ மீண்டும் சுற்றி வருகிறது. அந்த வீடியோ போட்ட பிறகுதான் அவருக்கு கொரோனா வந்தது என்ற செய்தி யோடு மக்கள் பேசுகின்றனர். ஏற்கெனவே அந்தக் கிராமத்தில் இந்து- முஸ்லிம் ஒற்றுமையோடுதான் வாழ்கிறார்கள். இவருடைய வெறிப்பேச்சு அந்த ஒற்றுமையைக் கெட்டிப்படுத்தி விட்டது என்கிறார்கள். இனி நிரந்தரமாகப் பழைய எம்.பி., யாகவே இருந்துவிட வேண்டியதுதான் என்று சிரித்துக் கொண்டே மக்கள் நகர்கின்றனர்.

அணி திரட்டல்

டாடா குழுமத்திற்குள், அதன் டிரஸ்ட் தலை வர் நோயல் டாடாவின் பிடி இறுகி வருகிறது. டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பில் இருக்கும் என். சந்திரசேகரன் அடுத்த ஐந்து ஆண்டு களுக்குத் தொடரட்டும் என்பதுதான் பெரும்பா லான வாரிய உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், ஏகமனதாகத் தேர்வாக வேண்டும் என்று சந்திரசேகரன் விரும்புகிறார். இதனால் தேர்வு செய்வதற்கான கூட்டம் தள்ளிப்போயுள்ளது. தனக்கு இந்த வாரியத்தில் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்ததால், சில நிபந்தனைகளை விதிக்க நோயல் டாடா முயற்சிக்கிறார். அதை மற்ற உறுப்பி னர்கள் புறக்கணிக்க முடியாது என்று கூறப்படு கிறது. அதை சந்திரசேகரன் ஏற்றுக் கொண்டால், ஏக மனதாகத் தேர்வு செய்து விடலாம் என்று நோயல் டாடா கூறுகிறார்.