states

img

அகில்யாநகர் மாவட்ட விவசாயிகள், தொழிலாளர்களின் 18 கோரிக்கைகள் ஏற்பு மகாராஷ்டிராவில் 60 கி.மீ., நடைபயணப் போராட்டம் வெற்றி

அகில்யாநகர் மாவட்ட விவசாயிகள், தொழிலாளர்களின் 18 கோரிக்கைகள் ஏற்பு மகாராஷ்டிராவில் 60 கி.மீ., நடைபயணப் போராட்டம் வெற்றி

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் அகில்யாநகர் மாவட்டத்தில் (அகமது நகர் மாவட்டத்தின் பெயர் மாற்றம்) பழங்குடி யினர் வனப்பகுதிகளில் விவசாயம் செய்யும்  உரிமை மற்றும் வீட்டடிமனை பட்டா, முதி யோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, ஆஷா (சுகாதா ரம்), அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்க ளுக்கு ஊதிய உயர்வு மற்றும் கட்டுமானத் தொழி லாளர்களுக்கு நலத்திட்டங்கள் என 18 கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) ஆகியவற்றின் தலைமையில் பிப்.,  24 அன்று ராஜூரில் நடைபயணம் தொடங்கி யது. பாஜக கூட்டணி அரசு பதற்றம் 148 கி.மீ., தொலைவில் உள்ள அகில்யா நகர் மாவட்டத் தலைமையகத்தை நோக்கி சென்ற இந்த நடைபயணத்தில் பழங்குடி விவ சாயிகள், ஆஷா, அங்கன்வாடி, சத்துணவு பணி யாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்றனர். பிப்., 27 அன்று, 3 நாட்கள் 60 கி.மீ., தூரத்தை கடந்து சங்கம்னேர் தாலுகாவில் உள்ள நிஜார்னேஷ்வரில் நடைபயணம் சென்று கொண்டு இருந்தது. அதாவது மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சரும், சர்க்கரை ஆலை அதிபருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீ லின் சொந்த ஊரான லோனியின் எல்லைக்கு அருகில் வந்தடைந்தது. அணிவகுத்து வந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உறுதியையும் போராட்ட குணத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசாங்கம் சிபிஎம் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. போராட்டம் வெற்றி அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் அகில்யாநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பங்கஜ் ஆஷியா, கூடுதல் மாவட்ட ஆட்சியர் பாலசாகேப் கோலேகர், தொழிலாளர் துறை ஆணையர், காவல், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சிபிஎம் மாநிலச் செயலாளர் அஜித் நவாலே, மாவட்டச் செயலாளர் சதாசிவ் சபலே, வினோத் நிகோலே எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுகாதாரத் துறையில் பகுதிநேர பெண் உதவியாளர்களின் ஊதியத்தை ரூ.2,000 ஆகவும், பள்ளி சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.1,000 ஆக உயர்த்தவும், பண்டார்தாரா அணையிலிருந்து பழங்குடி யினருக்குக் குடிநீர் மற்றும் பாசன வசதியை உறுதி செய்ய ஆய்வு தொடங்குதல், பழங்குடி யினர் பயிரிடும் நிலம் மற்றும் அவர்கள் வீடு கட்டியுள்ள இடங்களின் உரிமையை (பட்டா) அவர்களிடமே ஒப்படைக்கும் முடிவை உட னடியாகச் செயல்படுத்துதல், கட்டுமானத் தொழிலாளர்களுக்குக் குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே மீதமுள்ள கோ ரிக்கைகளை விரைந்து தீர்ப்பதாகவும் அர சாங்கம் உறுதி அளித்தது. விவசாயிகள், தொழிலாளர்கள் கொண்டாட்டம் இதற்கான ஒப்புதல் சான்றிதழ்களையும் மகாராஷ்டிரா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் சிபிஎம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு தலைவர்களிடம் ஒப்ப டைத்தார். கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்த தை போராட்டக் களத்திற்கு வந்து தலைவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பிற்கு விவசா யிகள், தொழிலாளர்கள் கைதட்டியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும் கொண்டாடினர். இதன்மூலம் பால்கர், நாசிக் - தானே நடை பயண வெற்றியைப் போல அகில்யாநகர் போ ராட்டமும் வெற்றி பெற்றுள்ளது மகாராஷ்டிரா மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.