tamilnadu

img

‘என்சிஇஆர்டி சுட்ட குண்டால் இன்று நீதித்துறை ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது’ 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடித் தடை

‘என்சிஇஆர்டி சுட்ட குண்டால் இன்று நீதித்துறை ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது’ 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடித் தடை

புதுதில்லி மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇ ஆர்டி) புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ (The Role of the Judiciary in Our Society) என்ற அத்தியாயத்தில் ‘நீதித்துறையில் நிலவும் ஊழல்’ மற்றும் ‘வழக்குகளின் பெரும் தேக்கம்’ உள்ளிட்டவைகள் சுட்டிக்காட்டப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பின. தாமாக முன்வந்து விசாரணை இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் என்சி இஆர்டி விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது ‘நீதித்துறை ஊழல்’ எனக் குறிப்பி டப்பட்டதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதை நீதித்துறை மீதான ‘திட்டமிட்ட, ஆழமான தாக்குதல்’ எனக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து உச்சநீதி மன்றம் விசாரிக்கும் என அவர் அறிவித்தார். இந்நிலையில், என்சிஇஆர்டி புத்தக வழக்கு வியாழனன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபூல் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபி ஷேக் மனு சிங்வி, விகாஷ் சிங் ஆகியோர் என்சிஇஆர்டி பாடப்புத்தக உள்ளடக்கம் குறித்த தங்கள் கவலைகளை வாய்மொழியாக எழுப்பினர். என்சிஇஆர்டி புத்தகம் முழு நீதித்துறையையும் அவதூறாகப் பேசுவதாகக் கூறினர். இந்த விவகாரம் குறித்து தனக்குத் தெரி யும். பல நீதிபதிகள் இந்த நிகழ்வுகளால் கலக்கம டைந்துள்ளனர் என்று கூறினார் தலைமை நீதிபதி சூர்ய காந்த். தொடர்ந்து ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இடையே காரசாரமான விவாதம் நடை பெற்றது. திணறிய மோடி அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா (எஸ்ஜி) : இந்த விவகாரத்தில் நாங்கள் (என்சிஇ ஆர்டி) நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம். வழக்கறிஞர் விகாஸ் சிங் (என்சிஇஆர்டி எதிர்த்தரப்பு) : இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்று. தலைமை நீதிபதி: இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறிவது உச்சநீதிமன்றத்தின் கடமை. ஆரம்பத்தில் அதிகாரிகள் இந்த உள்ள டக்கத்தை நியாயப்படுத்தியே  பதிலளித்தனர். இது ஒரு ஆழமான சதி என்று புரிகிறது.  துஷார்: இந்த விவகாரம் தொடர்பாக என்சிஇஆர்டி மன்னிப்புக் கோரியுள்ளது. கபில் சிபல் : மன்னிப்பு பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும்.  துஷார் : தற்போதைய மன்னிப்பு போது மானதல்ல என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்படும். இந்த அத்தியாயத்தைத் தயாரித்த நபர்கள் இனி ஒருபோதும் யுஜிசி அல்லது எந்த அமைச்சகத்திலும் பணியாற்ற மாட்டார்கள். தலைமை நீதிபதி: அது அவர்களுக்கு மிக எளிதான தண்டனை. அவர்கள் சுட்ட குண்டால் இன்று நீதித்துறை ரத்தம் சிந்திக் கொண்டி ருக்கிறது. நீதிமன்றம் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்போது எப்படி நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தப் புத்தகங்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ளன. துஷார் : 32 புத்தகங்கள் சந்தைக்குச் சென்றன. அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. முழுப் புத்தகமும் மறுபரிசீலனை செய்யப் படும்.  தலைமை நீதிபதி: இது ஒரு கணக்கிடப் பட்ட நடவடிக்கை. இந்திய நீதித்துறை ஊழல் நிறைந்தது என்பதை ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கற்பிப்பதே இதன் நோக்கம். இது ஒரு ஆழமான சதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். நீதிபதி பாக்சி: டிஜிட்டல் தளங்களில் உள்ள தகவல்கள் ஒருதலைப்பட்சமாக உள்ளன. நீதித்துறை அடிப்படை உரிமைகளைப் பாது காப்பவர் என்பது போன்ற தகவல்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இணையத்திலிருந்து இவற்றை நீக்க உத்தரவிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாம் அறிய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இறுதியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தனது உத்தரவில்,”நீதித்துறை குறித்த என்சிஇஆர்டி குறித்த பாடப்புத்தகத்தை மறு பதிப்பு செய்யவும், டிஜிட்டல் முறையில் பரப்ப வும் முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே மாணவர்களுக்கு ஒரு தலைப்பட்சமான தவறான கருத்துக்களைக் கற்பிப்பது அடிப்படைத் தவறு. இது நீதித்துறையின் சுதந்திரத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாம் அறிய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.  சர்ச்சைக் குரிய இந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்ய வேண்டாம். இணையதளம் வழியாகப் பகிரவும் கூடாது. இதனை மீறுவது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகக் கருதப்படும்.  அனைத்து மாநிலக் கல்விச் செயலா ளர்களும் புத்தகத்தின் அச்சுப் பிரதிகளை மற்றும் டிஜிட்டல் கோப்புகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். இது குறித்த அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்வது என்சிஇ ஆர்டி இயக்குநர் டாக்டர் தினேஷ் பிரசாத் சக்லானி  மற்றும் பள்ளித் தாளாளர்களின் தனிப் பட்ட பொறுப்பாகும். இந்த அத்தியாயத்தை எழுதிய தேசிய பாடத்திட்ட வாரிய உறுப்பி னர்களின் பெயர்கள் மற்றும் தகுதிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அத்தியாயத்தை இறுதி செய்த கூட்டத்தின் குறிப்புகளை (Minutes of Meeting) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

நீதித்துறையை சிதைக்கும் நோக்கத்தில் பள்ளிப் பாடப் புத்தகத்தை வெளியிட்ட என்சிஇஆர்டி-யின் அடாவடிச் செயலை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. ஆனால் இதனை திசைதிருப்ப ‘பாஜக ஆதரவு கோடி மீடியா ஊடகங்கள்’ பல்வேறு செய்தி தொகுப்புகளை வெளியிட்டன. ஆனால் கட்டுரை மற்றும் கடந்த கால பாடப் புத்த கங்களின் நீதித்துறை தொடர்பான அடிப்படை தன்மையை வெளியிட்டு, ஜனநாயகத்தை பாது காக்கும் நோக்கத்தில் செயல்படும் ஊடகங்கள் கோடி மீடியா ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தன. இந்நிலையில், செவ்வாயன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் போது ஊடகங்களுக்கு தலைமை நீதிபதி பாராட்டுத் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்,”என்சிஇஆர்டி பாடப் புத்தக விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம். ஊடங்களைப் போல நீதித்துறை என்ற சுதந்திரமான அமைப்பைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.