technology

img

வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு வசதி!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

180க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள் பல்வேறு மொழிகளில் எளிதாகத் தொடர்புகொள்ளும் வகையில் மெட்டா நிறுவனம் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செப்டம்பர் 23-ஆம் தேதியில் இருந்து படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு மெசேஜை வேறொரு மொழியில் மொழிபெயர்க்க, மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி, மொழிபெயர்ப்பை தேர்வு செய்து, விருப்பமான மொழியில் மொழிபெயர்த்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, போர்த்துகீஸ், ரஷ்யன் மற்றும் அரபிக் ஆகிய ஆறு மொழிகளிலும், ஐபோன் பயனர்களுக்கு 19-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கிறது.