technology

img

வாட்ஸ்அப் வெப்பில் ஸ்க்ரோல் பிரச்சனை - பயனர்கள் புகார்

உலகளவில், வாட்ஸ்அப் வெப் பதிப்பில் சாட்களை ஸ்க்ரோல் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் எக்ஸ் பக்கத்தில், வாட்ஸ்ஆப் வெப் பதிப்பில் சாட்களை ஸ்க்ரோல் செய்ய முடியவில்லை எனவும், வாட்ஸ்ஆப்பில் புகைப்படங்கள் மெதுவாக டவுன்லோடு ஆகிறதாகவும் பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.