tamilnadu

img

அறந்தாங்கியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வாலிபர் சங்கம் கோரிக்கை

அறந்தாங்கியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை  நிறைவேற்ற வாலிபர் சங்கம் கோரிக்கை

அறந்தாங்கி, ஆக.3-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அறந்தாங்கி ஒன்றிய மாநாடு, அக்ரஹாரம் தாயகம் பள்ளி அருகே நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு, ஒன்றியத் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  ஒன்றியச் செயலாளர் எஸ். பாண்டி கெளதம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் நாராயண மூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ராதா, சிஐடியூ மாணிக்கம், கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  அறந்தாங்கி நகராட்சியில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அறந்தாங்கி தாலுகா முழுமையும் உள்ள அரசு பணிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு பள்ளியில் ஆசிரியர் நியமனத்தை தொகுப்பு ஊதியத்தில் பணி நிரப்பாமல் நிரந்தர பணியில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானமாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.  11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யபட்டது. புதிய ஒன்றியத் தலைவராக முருகேசன், துணைத் தலைவராக சிவக்குமார், செயலாளராக கோபாலகிருஷ்ணன், துணைச் செயலா ளராக சுரேகா, பொருளாராக துரையரசன் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர். மகாதீர் உரையாற்றினார்.