அரசு மருத்துவமனையை உடனடியாக திறந்திடுக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
திருப்பூர், ஜூலை 15- 15.வேலம்பாளையம் பகுதி யில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் படாமல் உள்ள அரசு மருத்துவ மனையை உடனடியாக திறக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பி.என்.சாலை பூலுவ பட்டியிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் 15.வேலம் பாளையம் பகுதியில் அரசு மருத்து வமனை கட்டுமானப்பணி நடை பெற்று வந்தது. கொரோனா பெருந் தொற்றுக்கு பிறகு மீண்டும் பிப்.2022 ஆம் ஆண்டு 86 படுக்கைக ளுடன் பொது வார்டு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், உள் நோயாளிகள் தனிப்பிரிவு, விரிவு படுத்தப்பட்ட ஸ்கேன் வசதியுடன் புதிய மருத்துவமனை தேசிய மற் றும் மாநில நகர்ப்புற சுகாதார திட் டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டு றவு முகமை நிதி ரூ.47.56 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக் கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டு ஆகியும் திறக் கப்படவில்லை. இதையடுத்து இந்த மருத்துவமனையை உடனடி யாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஜூன் 8 ஆம் தேதி இருசக்கர வாகன பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச் சுவார்த்தையில், ஜூலை 2 ஆம் தேதிக்குள் மருத்துவமனை எப் போது திறக்கப்படும் என தெரி விக்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்தும் தேதி அறிவிக்கப் படவில்லை. இதனால் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.சிங்கார வேலன் தலைமையில் திங்களன்று மாவட்ட சுகாதார அலுவலர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் எஸ்.அருள், செயலாளர் கே.பாலமுரளி, பொருளாளர் ஜி. சிந்தன், நிர்வாகிகள் சந்தோஷ், பாலசுப்பிரமணியம், நிருபன் சக்கர வர்த்தி, சிரஞ்சீவி, மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, சிபிஎம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட் டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவிநாசி தலைமை மருத்துவ அலுவலர் கண்ணன் மகாராஜ், வடக்கு காவல் உதவி ஆணையர் செங்குட்டுவன், ஆய் வாளர் சசிகலா உள்ளிட்ட அரசு அலு வலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது 8 மருத்துவர் கள், 20 செவிலியர்கள் உள்ளிட்ட 44 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைத்து கட்டுமா னப் பணிகளும் நிறைவடைந்துள் ளதாகவும், விரைவில் மருத்துவ மனை திறக்கப்படும் என தெரிவித்த னர்.