வேளாண் பொறியியல் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஆக. 24- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியலில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது. அதில் பலகட்ட கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான நிலையில் கணிசமான எண்ணிக்கையிலான இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு: அரசு நிறுவனங்களான கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தோட்டக்கலை நிறுவனத்தில் 24 இடங்கள், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் வேளாண்மை நிறுவனத்தில் 7 இடங்கள், திருச்சி மாவட்டம், குமுளூர், வேளாண்மை நிறுவனத்தில் 71 இடங்கள் மற்றும் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 27 இடங்கள் உள்ளன. அரசுடன் இணைந்த அரசு நிறுவனங்களான சென்னை மாவட்டம், மாதவரம், தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிறுவனத்தில் 5 இடங்கள், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், காய்கறிகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தில் 8 இடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் தாளி தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் 13 இடங்கள் உள்ளன. அரசுடன் இணைந்த தனியார் நிறுவனங்களான கோயம்புத்தூர் மாவட்டம் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா, வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தில் 28 இடங்கள், நாமக்கல் மாவட்டம், பிஜிபி மற்றும் அறிவியல் கல்லூரியில் 41 இடங்கள், இராணிப்பேட்டை மாவட்டம், காலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் 56 இடங்கள் மற்றும் தோட்டக்கலை கல்லூரியில் 37 இடங்கள், சகாயா தோட்டம் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தில் 44 இடங்கள், திருவண்ணாமலை மாவட்டம், அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் 37 இடங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி, MIT வேளாண்மைப் பள்ளியில் வேளாண்மைத் துறையில் 54 இடங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையில் 45 இடங்கள் உள்ளன. எனவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியலில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளில் சேரவிருப்பமுள்ள மாணவர்கள் ஆக.25 மற்றும் செப்.4 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியிலும், ஆக.29 மற்றும் செப்.10 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி பாடசாலையிலும், செப்.2 மற்றும் செப்.12 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 வரை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ள முகாம்களில் பங்கேற்று பயனடையலாம். மேலும், மாணவர்கள் ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.