குழித்துறை சந்திப்பில் பெண் விடுதலைச் சிற்பம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குழித்துறை சந்திப்பில் பெண் விடுதலையை பறைசாற்றும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநிலத்தின் பாறசாலை சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ஹரிந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வுக்கு வரவேற்புக்குழு தலைவர் முனைவர் லேகா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாதர் சங்க மாநிலத் துணைத்தலைவர் உஷா பாசி, லதா, வரவேற்புக்குழு பொருளாளர் அனந்த சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.