தஞ்சாவூரில் நுகர்வோர் ஆணைய உத்தரவின்படி பெண்ணுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு
தஞ்சாவூர், ஆக. 26- தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தர முன்வராத நிலையில், நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ரூ.18 லட்சம் இழப்பீட்டுத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரைச் சேர்ந்தவர் குழந்தை செல்வம். இவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, வரவு செலவு செய்து வந்தார். இதனிடையே, இவரது வங்கிக் கணக்கிலிருந்து விபத்து காப்பீடுக்காக 2021ஆம் ஆண்டில் ரூ.1,000 பிடித்தம் செய்யப்பட்டதால், அவரது பெயர் பாலிசிதாரராக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவர் 2022 செப்டம்பர் 16ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தில் குழந்தை செல்வத்தின் மனைவி சரிதா உள்ளிட்டோர் இழப்பீட்டுத் தொகை கோரினர். இதை காப்பீட்டு நிறுவனம் வழங்காததால், தஞ்சா வூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் மனு தாக்கல் செய்தார். இதை, ஆணையம் விசாரித்து சரிதா உள்ளிட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை யை வழங்க ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, சரிதாவிடம் இழப்பீட்டு உரிமைத்தொகையான ரூ.18 லட்சத்துக்கான காசோலையை ஆணைய தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலு மணி திங்கள்கிழமை வழங்கினர்.
