தவெக தலைவர் விஜய் கரூரில் சரியான திட்டமிடலின்றி நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 40பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஞாயிறன்று (பிப்.29) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி குழு சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், பகுதித்தலைவர் ச.ராகேஷ், பொருளாளர் டி.கௌதம், துணைத்தலைவர் உ.பூவரசன் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.
