tamilnadu

img

சேதரம்பட்டு காலனியில் குடிமனை பட்டா பெற்ற 150 குடும்பங்கள் வெளியேற்றமா-?

சேதரம்பட்டு காலனியில் குடிமனை பட்டா  பெற்ற 150 குடும்பங்கள் வெளியேற்றமா

திருவண்ணாமலை, அக். 18- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சேதரம்பட்டு காலனி பகுதியில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசு 86 குடிமனை பட்டாக்களை வழங்கியது. அந்த இடத்தில் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சிமெண்ட் சாலை, கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மக்கள் வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் ஏழை, எளிய கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் மக்கள் தொடர்ந்து வசித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் ப. செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ச. குமரன், குபேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.