tamilnadu

ஈடி-க்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம்!

ஈடி-க்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம்!

ஆர்.எஸ். பாரதி அறிக்கை

ஆர்.எஸ். பாரதி அறிக்கை சென்னை: திமுகவினர் மோடிக்கும் அமலாக்கத்துறைக்கும் அஞ்சமாட்டார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அம லாக்கத்துறை சோதனை நடத்திய பின்னணி யில் ஆர்.எஸ். பாரதி இவ்வாறு கூறி யுள்ளார். “உளவுத்துறை ஐஜி-யாக இருந்த ஜாபர் சேட்டுக்கு நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் 2022-இல் 9 மணி நேரம் விசாரணைக்கு ஒத்து ழைப்பு அளித்த பெரியசாமிக்கு எதிராக  மீண்டும் சோதனை நடத்தியது சந்தேகத்தை  எழுப்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை 5,300 வழக்குகள் பதிவு செய்த நிலையில்  வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை  வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதி மன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் குறிப்பிட்டு உள்ளார். பாஜக வாசிங் மிஷினில் விழ திமுக வினர் கோழைகள் அல்ல, அவர்கள் சுயமரி யாதை பாதையில் வந்தவர்கள்” என்றும் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார்.