tamilnadu

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது!

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது!

ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, ஆக. 7 - அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கைகளை ஒன்றிய அரசு எதிர்த்து நிற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: இந்திய ஏற்றுமதிகள் மீது, அமெரிக்கா 50 சதவிகிதம் வரி  விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஒருதலைப்பட்சமான நட வடிக்கையானது தன்னிச்சை யானதும், சர்வாதிகாரமானதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிரட்டல் தந்திரங்களை பிரதி பலிப்பதுமாகும். நடந்து வரும் வர்த்தக பேச்சு வார்த்தைகளின் போது, அமெரிக்கா  விடுத்த அனைத்து கோரிக்கைகளை யும் ஏற்காததற்காக இந்திய ஏற்று மதிகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதற்கு மேல்,  ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்கியதற்கு அபராதமாக கூடுதலாக 25 சதவிகிதம் விதிக்கப் பட்டிருக்கிறது.  அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வரும் அதே வேளையில், இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு களைத் தொடரக்கூடாது என்று அவை மிரட்டுகின்றன. அமெரிக்காவின் நிர்ப்பந்தங் களுக்கு அடிபணியாது எதிர்த்து உறுதி யாக இந்திய அரசாங்கம் நிற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்த வரிவிதிப்பின் விளை வாகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர் களின் நலன்களைப் பாதுகாத்திட ஒன்றிய அரசாங்கம் உடனடியாக நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும். நாட்டின் பொருளாதார இறை யாண்மையைப் பாதுகாத்திட, அமெரிக்காவின் இத்தகைய மிரட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.         (ந.நி.)