tamilnadu

கோவாவிலும்  வாக்கு திருட்டு ஒரே வீட்டில்  119 வாக்களர்கள்

கோவாவிலும்  வாக்கு திருட்டு ஒரே வீட்டில்  119 வாக்களர்கள்

பனாஜி, ஆக. 17- கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இம்மாநிலத்தில் வாக்கு திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன.  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவா மாநிலத்தின் மார்காயிம் தொகுதியின் ராம்நாதியில் உள்ள  வீட்டில் (24/பி) 119 வாக்களர்கள் உள்ளனர். 8 பேர் வசிக்கக் கூடிய  அந்த வீட்டில் 119 வாக்காளர்கள் வசித்தது எப்படி? அவர்கள் எப்படி அந்த சிறிய வீட்டில் வாக்களர்களாக பதிவு செய்யயப்பட்டுள்ளனர். கோவாவில்  போலி முகவரிகள் மூலம் இன்னும் நிறைய வாக்காளர்கள் உள்ளனர். மார்காயிம் தொகுதி பூத் லெவல் அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைக்க வேண்டும். ஒரே  வீட்டில் 119 வாக்காளர்கள் என்பது  மிக மோசமான சாதனை ஆகும்.  இந்த முறைகேடு தொடர்பாக ஜூலை 2025இல் புகார் அளிக்கப் பட்டன. ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை” என அதில் கூறப் பட்டுள்ளது.