tamilnadu

img

கல்குவாரி அனுமதி ரத்து கோரி கிராம மக்கள் போராட்டம்

கல்குவாரி அனுமதி ரத்து கோரி கிராம மக்கள் போராட்டம்

மதுரை, அக்.3- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் அமைக்  கப்பட்டுள்ள கல்குவாரி பணிகளை நிறுத்தி, அனுமதியை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, வெள்ளியன்று 1000-க்கும் மேற் பட்டோர் தங்களது ரேசன் கார்டுகளை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருமால் கிராமத்தில் 2000 வீடு களில், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து, 5,000 ஏக்கர் விவசாய நிலங்களையும் 70 கிணறுகளையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை யில் கல்குவாரி விதிமுறைகள் மீறி இயங்குவதால், வீடுகளில் விரிசல்,  தூசிப்படலம், சுவாச நோய்கள், மேலும் விவசாய நிலங்கள் பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகள் ஏற் பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். “எங்கள் கிராமத்தின் வாழ்வாதா ரம் விவசாயமே. இதை அழிக்கும் கல்  குவாரியை அனுமதிக்கக் கூடாது,” என கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் ஆட்சியர்  அலுவலகத்தை நோக்கி சென்ற போது போலீசார் தடுத்ததால், அவர்  கள் சாலையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டு, “கல்குவாரி அனு மதி ரத்து செய்யப்பட வேண்டும்” என  முழக்கமிட்டனர்.