tamilnadu

img

மாநில அளவிலான நீச்சல் போட்டி வெங்கடஸ்வரா பள்ளி சாதனை

மாநில அளவிலான  நீச்சல் போட்டி வெங்கடஸ்வரா பள்ளி சாதனை

புதுக்கோட்டை, ஜூலை 31-  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  நாகபட்டினத்தில் நடைபெற்ற மாடர்ன் பென்டத்லான் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி ம.சந்தோஷிகா ட்ரையத்லான், பயத்லான் மற்றும் லேசர் ரன் ஆகிய மூன்று போட்டிகளிலும் இரண்டாம் பரிசு பெற்று, மூன்று வெள்ளிப்பதக்கங்கள் வென்று பாட்னாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.  பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ம.நிஷாந்த் கிருஷ்ணன் ட்ரயத்லான், பயத்லான், லேசர் ரன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசாக வெள்ளிப்பதக்கம் பெற்று பாட்னாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.   தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றுள்ள மாணவர்களை பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.