tamilnadu

வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்ல வேண்டும்: சிபிஎம்

வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்ல வேண்டும்: சிபிஎம்

விருதுநகர், செப்.19- விருதுநகர் சந்திப்பு ரயில் நிலை யத்தில் வந்தே பாரத் ரயில் நின்று  செல்ல வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எல்.முரு கன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆ.குரு சாமி, மாவட்ட செயற்குழு, மாவட்  டக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். அதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு : விருதுநகர் மாவட்ட தலைநக ராகவும், பாரம்பரியமான வியா பார ஸ்தலமாகவும் உள்ளது. இங்கு  சந்திப்பு ரயில் நிலையம் நீண்டகால மாக செயல்பட்டு வருகிறது. இராஜ பாளையம், சிவகாசி, திருவில்லி புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பய ணிகள் விருதுநகர் ரயில் நிலை யத்திலிருந்து பல்வேறு ஊர்க ளுக்கு பயணம் செய்கின்றனர். இந்நிலையில், நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில்  விருதுநகர் சந்திப்பு ரயில் நிலை யம் வழியாக இயக்கப்பட்டு வரு கிறது. இந்த வண்டி, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்கி றது. ஆனால், விருதுநகர் சந்திப்பு  ரயில் நிலையத்தில் நின்று செல்வ தில்லை. இதனால், ஏராளமான  பயணிகள் மிகுந்த ஏமாற்றமடை கின்றனர். மாறாக, மதுரை வரை பேருந்து அல்லது வாடகை கார்  மூலம் சென்று அங்கிருந்து வந்தே  பாரத் ரயிலில் பயணம் செய்ய  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்  டுள்ளனர். இதனால் பயணிகளுக்கு  கூடுதல் செலவு மற்றும் காலவிரை யம் ஏற்படுகிறது. எனவே, தெற்கு ரயில்வே நிர்வா கம், நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் வண்டியை விருதுநகர் சந்திப்பு ரயில் நிலை யத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விருதுநகரில் இருந்து  மானாமதுரை வழியாக காரைக் குடி, திருச்சி வரை   பயணிகள் ரயில் வந்து செல்கிறது. அதிகாலை  6 மணிக்கு மேல் இந்த வண்டி  புறப்படுகிறது. இரவு 9 மணிக்கு  மேல் விருதுநகரை வந்தடை கிறது. விருதுநகரில் இருந்து இராஜ பாளையத்திற்கு இரவு நேரத்தில் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. எனவே, இந்த பயணிகள் ரயிலை இராஜபாளையம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும், விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி கிழக்குப் பகுதியில் பயணச்சீட்டு வாங்கும் இடம் அமைக்க வேண்டும் எனவும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.