tamilnadu

என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் முகலாயர்கள் குறிப்பு நீக்கம் வைகோ கண்டனம்

என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் முகலாயர்கள் குறிப்பு நீக்கம் வைகோ கண்டனம்

சென்னை, ஜூலை 17 -  ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ  மாணவர்களுக்கான 7 ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தானிய ஆட்சி பற்றிய குறிப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். “7, 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் “மக்களை கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் பாபர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அவுரங்கசீப் கோயில்களையும் குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர்” என்றும் “அக்பரின் ஆட்சி கொடூரமானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். “இதுபோன்ற இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே உடனடியாக பாட புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தினார்.