tamilnadu

லால்குடியில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்வதை உறுதி செய்க

லால்குடியில் வைகை எக்ஸ்பிரஸ்  நின்று செல்வதை உறுதி செய்க

வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.27 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் லால்குடி ஒன்றிய 19 ஆவது மாநாடு திங்களன்று நடைபெற்றது. வாலிபர் சங்க லால்குடி ஒன்றிய மாநாட்டு  பேரணியில், அண்ணா நகர் கிளையில் இருந்து மாநாட்டுக் கொடிமரம் கயிற்றை கட்டுமான சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் வினோத் எடுத்து கொடுத்தார். நன்னிமங்க லம் கிளையில் இருந்து சங்க மாநாட்டுக் கொடியை மாதர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் விசாலாட்சி எடுத்து கொடுத்தார். அய்யன்வாய்க்கால் கரை கிளையில் இருந்து தியாகி நெல்லை அசோக் நினைவு ஜோதியை, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் பாலமுருகன் எடுத்து கொடுத்தார். மாநாட்டு பேரணியை (கொடி, கொடிமரம்,  ஜோதி பயணம்) அகில இந்திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக் குழு  உறுப்பினர் சந்திரன் கொடியசைத்து துவக்கி  வைத்தார். மாநாட்டிற்கு சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் கீதாராணி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை டேவிட் வாசித்தார். வீரமணி வரவேற்புரை ஆற்றி னார். மாநாட்டை, மாவட்டத் தலைவர் நாக ராஜ் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலா ளர் பாலகுமார் வாழ்த்துரை வழங்கினார்.  லால்குடி கொள்ளிடம் ஆற்றில் இடை யாற்றுமங்கலம் முதல் கல்லணை கிளிக்கூடு  வரை இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். லால்குடியில் வைகை எக்ஸ்பிரஸ்  ரயில் நின்று செல்வதை உறுதி செய்ய வேண்டும்  என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத்தின் புதிய தலைவராக ஆர்.டேவிட், செயலாளராக வி.கீதாராணி, பொரு ளாளராக டி.சத்யராஜ், துணைத் தலைவராக  ஆகாஷ், துணைச் செயலாளராக எஸ்.செர்லின் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றி யக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில்  தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம்  செய்து, சங்கத்தின் மாநில இணைச் செய லாளர் செல்வராஜ் நிறைவுரையாற்றினார். வெண்மணி கலைக்குழு தோழர் கணேச னின் கலைநிகழ்ச்சியோடு மாநாடு நிறைவு பெற்றது. டி.சத்யராஜ் நன்றி கூறினார்.