நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
நாகர்கோவில்,பிப்.26- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசாரிப்பள்ளம் அனந்த நகர் பகுதியில் நாட்டு நலப் பணி திட்டம் முகாம் நடைபெற்றது. களப்பணி, என் வாக்கு என் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி விலங்கியல் துறை தலைவர் முனைவர் ரா.ரமேஷ் தலைமை வகித்தார் . தாவரவியல் துறை துறைத்தலைவர் முனைவர் சு.ந.ராஜன் பேசினார் . முனைவர் ம .புகழேந்திர சோழன் சிறப்புரையாற்றினார் . தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
