டபுள் என்ஜினா? ‘டிரபுள்’ என்ஜினா? - கே.பாலபாரதி
விடுதலைக்குப் பிறகு 1957 வரை மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சியே நிலவியது. ஆனால், 1957-இல் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி (தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில்) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோது இந்த ஏகபோகம் முதன்முதலில் தகர்ந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் 1967-இல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக, சிபிஎம், சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் வலிமையான கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தின. இது மாநில அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான வரலாற்றுத் திருப்பமாக அமைந்தது. அன்றி லிருந்து இன்று வரை, மாநிலங்களின் தனித்துவ மான தேவைகளையும் மக்களின் உணர்வுகளை யும் புரிந்த மாநிலக் கட்சிகளே பூர்த்தி செய்து வருகின்றன. மாநில அரசின் வர்க்கச் சார்புத் தன்மைக்கேற்பவே அவை அமைந்திருந்தன. மாநில சுயாட்சியும் அது குறித்த ஆய்வு குழுக்களும் மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் விரிசல் களைச் சரிசெய்ய அவ்வப்போது பல கமிஷன்கள் அமைக்கப்பட்டன.
கேரளாவில் தோழர் இ.எம்.எஸ், மேற்குவங்கத்தில் தோழர் ஜோதிபாசு துவங்கி அது மாநில உரிமைகளுக்கான வலுவான முழக்கமாக வளர்ந்தது. தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு (1969) முதல், ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், பூஞ்சி கமிஷன் வரை அனைத்தும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தின. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமை யில் அமைத்த குழுவும், மாநில சுயாட்சியை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி யுள்ளது. ஆனால், இந்த ஆய்வுகளையும் பரிந்துரை களையும் பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்து வருகிறது. மாநில உரிமைகள் மீதான பொருளாதாரத் தாக்குதல் மாற்றுக்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை ஒன்றிய அரசு “மாற்றாந்தாய் மனப்பான்மையோடு” நடத்துகிறது.
இதற்கான பட்டியல் நீளமானது. நிதிப் பகிர்வு பாரபட்சம்: ஜிஎஸ்டி (GST) நிலுவைத் தொகையை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதுடன், மாநிலங் களின் வரி வருவாயில் நியாயமான பங்கைக் கொடுக்காமல் வஞ்சிக்கிறது. பொது விநியோக முறைக்கான மானியங் களை ரத்து செய்தல் மற்றும் மாநிலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை போடுதல் என திட்டங்களை முடக்குகிறது. நிழல் அரசாங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்க ப்பட்ட அரசை மதிக்காமல், ஆளுநர்கள் மூலம் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்த முயல்கிறது. கல்வி மற்றும் சுகாதாரம்: மாநிலப் பட்டிய லில் உள்ள உரிமைகளில் ஒன்றிய அரசு தலை யிட்டு அதன் சுயாட்சியைக் கெடுக்கிறது. ‘டபுள் என்ஜின்’ மாநிலங்களின் அவல நிலை ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என பாஜக கூறி வரும் நிலையில், அந்த மாநிலங்களின் யதார்த்த நிலை கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மணிப்பூரில் அங்குள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவரே பயங்கரவாதக் குழுவால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
தான் உயிருடன் இருக்கும்போதே பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வுக்கே பாதுகாப்பில்லையா?” என்று கேள்வி எழுப்பியும் அதற்குப் பதில் இல்லை. உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைவு மற்றும் அடிப்படை நிர்வாகத் தோல்வி களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள னர். மத்தியப்பிரதேசத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் ‘டபுள் என்ஜின்’ பிம்பத்தை உடைக்கின்றன. இந்துக்களின் பண்டிகைகளையும் சிறுபான்மை யினர் பண்டிகைகளையும் மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்திற்குள் தள்ளிவிடும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், தஞ்சை மைக்கேல்பட்டி கிறிஸ்துவப் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு. மதமாற்றத்தால் தான் மாணவி உயிரிழந்தார் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மாநிலம் தழுவிய அளவில் வதந்திகளையும், கலவரச் சூழலையும் உருவாக்க முயன்றனர். ஆனால், இது தொடர்பான சிபிஐ விசாரணையில் மதமாற்றக் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது உறுதியானது. இதனை உச்சநீதிம ன்றமும் உறுதி செய்து பாஜகவின் பொய்களைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய போலிப் பிரச்சாரங்கள் மூலம் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க பாஜக துடிக்கிறது.
2026 தேர்தல் ஒன்றிய அரசின் எதேச்சதி காரமா? மாநில மக்களின் உரிமையா?; மதவெறியா? மதச்சார்பின்மையா? என்ற கேள்விகளே மக்கள் முன்னால் நிற்கின்றன. தற்போது இந்தியாவில் சுமார் 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இந்த எண்ணிக்கையை உயர்த்தவும், இந்தியாவையே ஒரு ஒற்றையாட்சி முறைக்குள் கொண்டு வரவும் பாஜக துடிக்கிறது. குறிப்பாக, மாநில உரிமைகளைத் தீவிரமாக முன்னெடுக்கும் தமிழ்நாடு மற்றும் கேரளாவைக் குறிவைத்து பாஜக காய்களை நகர்த்துகிறது. வழக்கமான தேர்தல் அல்ல! வரவிருக்கும் 2026 தேர்தல் என்பது வழக்கமான ஒரு தேர்தல் அல்ல. அது “ஒன்றிய அரசின் எதேச்சதிகாரமா? அல்லது மாநிலங் களின் உரிமையா?” என்ற கேள்விக்கு விடை தேடும் களமாகும்.
தமிழ்நாட்டின் இயல்பான மனிதநேயம், மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் பாஜக-அஇஅதிமுக கூட்டணியை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். மாநில உரிமைகளுக்காகவும், சமூக நீதி காக்கவும் இடதுசாரிக் கட்சிகளும், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளும் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியோடும் மக்களின் பேராதரவோடும் 2026, தமிழ்நாடு தேர்தலை நோக்கித் தயாராவோம்.. துணிவோடு களமாடுவோம்!
