world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வரிப் பணத்தை கொடுங்கள் : அமெ.நிறுவனங்கள் வழக்கு 

டிரம்ப்பின் பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு அந் நாட்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, தாங்கள் செலுத்திய வரிப்பணத்தை முழு மையாகத் திரும்பத் தரக் கோரி ஃபெட்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஃபெட்எக்ஸ் தாக்கல் செய்த மனுவில், வரிகளைச் செலுத்தியதால் தங்களின் நிறு வனம் பெரும் நிதி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அந்த இழப்பை ஈடுகட்ட வரிப்பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது. ஃபெட்எக்ஸ் நிறுவ னத்தைத் தொடர்ந்து காஸ்ட்கோ, ரெவ்லான் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளன. 

‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை  சீனாவிடம் இருந்து வாங்குகிறது ஈரான் 

அமெரிக்காவுடன் போர்ப் பதற்றம் தீவிரமா கியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ளது. ஒலியை விட வேகமாகச் செல்லக் கூடிய இந்த நவீன ஏவுகணைகள் சுமார் 290 கிலோமீட்டா் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. மிகத் தாழ்வாகவும், மின்னல் வேகத்திலும் பறப்பதால், கப்பல்களில் உள்ள பாதுகாப்பு ரேடார்களால் இவற்றைத் தடுப்பது மிகவும் கடினம். கடந்த ஆண்டு இஸ்ரேலு டன் நடந்த 12 நாள் போருக்குப் பிறகு இந்த ஏவுகணை களை வாங்க ஈரான் வேகம் காட்டிவருகிறது.

நான் இல்லையெனில் பாக்.. பிரதமர் கொலை செய்யப்பட்டிருப்பார் - டிரம்ப் 

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன். எனது தலையீடு இல்லையெனில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கொல் லப்பட்டிருப்பார். நான் தான் அவரது உயிரை காப்பா ற்றியுள்ளேன் என டிரம்ப் பேசியுள்ளார்.  போரை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானில் 3.5 லட்சம் மக்கள் பலியாகி இருப்பார்கள், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்துங்கள் என்று ஷேபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாகவும்  டிரம்ப் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

காசா அமைதித் திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு

ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா முன்வைத்த காசா அமைதித் திட்டம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான ஒரு புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கு கிறது என்றார். இந்தச் சந்திப்பின் போது பேசிய அவர், “மனிதநேயம் என்பது ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது என்பதில் இந்தியாவின் தொலை நோக்குப் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது’’ என்றார்.

இந்தியா - இஸ்ரேல் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு

இந்தியாவும் இஸ்ரேலும் தங்களது வணிகத் தொடர்புகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்து வதற்காக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. வணிக ரீதியிலான பிணைப்பை வலுப் படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்கு நாள் பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 26 அன்று நிறை வடைந்தன. இஸ்ரேல் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இரு நாடுகளும் தங்களது இருதரப்பு உறவை‘அதி முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கூட்டாண்மை’ என்ற நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் மேலும் பலப்படும்.