அமைதிப் பேச்சுவார்த்தையைத் திட்டமிட்டுக் குலைத்த டிரம்ப்
டெஹ்ரான், பிப். 28 - ஈரான் மீது அமெரிக்கா வும் இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை துவங்கியுள் ளன. பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லாத அமெ ரிக்கா, ஈரானைத் தாக்கிய தாக வேண்டும் என்பதற் காக திட்டமிட்டே சர்வ தேச சட்டங்களை மீறி தாக்கு தலை அரங்கேற்றி வரு கிறது. ஈரான் தனது உள்நாட்டு அணுசக்தி தொழில் நுட்பத்தில் முன்னேறுவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பவில்லை. இதனால், ஈரான் அணுகுண்டை தயா ரிக்கப் போகிறது என பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டன. இதன் பின்னணியில் கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்த மோதல் 12 நாட்களாக நீடித்தன. இந்த மோதலின் போது அமெரிக்கா, ஈரா னின் அணு உலைகள் மீது குண்டுகளை வீசியது. இதன் பிறகு ஈரானுடன் அணு செறிவூட்டல் தொ டர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளை அமெரிக்க நடத்தி வருகிறது. கடைசி இரு சுற்று பேச்சு வார்த்தை கள் ஜெனிவாவில் நடை பெற்றன. இப்பேச்சுவார்த்தை களில் யுரேனிய செறி வூட்டல் அளவை ஈரான் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது. அதன்படியே யுரேனியம் செறிவூட்டலைத் தவிர்க்க ஈரான் ஒப்புக்கொண்டதாக பேச்சுவார்த்தைக்கு மத்தி யஸ்தம் செய்து வந்த ஓமன் வெளியுறவு அமைச்ச ரும் தெரிவித்தார். மேலும் இது ஒரு “முக்கிய முன் னேற்றம்” என்றும் கூறி இருந்தார். ஆனால், அணுசக்தி விவகாரம் தவிர்த்து, பேச்சுவார்த்தைக்கு சம்பந்த மில்லாத பாலிஸ்ட்டிக் மற்றும் அதிக தூரம் செல் லும் ஏவுகணைகளுக்கு கட்டுப்பாடு, ஹிஸ்புல் லா உள்ளிட்ட அமைப்புக ளுக்கு ஈரான் உதவி செய் யக்கூடாது என்பன போன்ற புதிய பிரச்சனைகளை வேண்டுமென்றே அமெ ரிக்கா கிளப்பியது. இதனை ஈரான் ஏற்கவில்லை. இதனை ஒரு காரண மாக்கிய அமெரிக்கா, ஈரான் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற தமது உள்நோக் கத்தையும் இணைத்து பேச்சுவார்த்தைகளை முறித் தார். அதைத்தொடர்ந்து, தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல்கள் சர்வ தேசச் சட்டம் மற்றும் ஈரானின் இறையாண்மையை மீறும் செயல் என கடுமையாகக் கண்டித்து ஈரான் அரசு, ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் பிரிவு 51 (Article 51)-இன் படி, தற் காப்புக்காகப் பதிலடி தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது எனக் கூறி, ஐக்கிய அரபு அமீர கம், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெ ரிக்க ராணுவத் தலங்க ளின் மீது தாக்குதல் நடத்தி யுள்ளது.