தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு தேனி மாவட்டத்தில் இரங்கல் ஊர்வலம்
தேனி, பிப்.26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முது பெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு மறைவை யொட்டி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் இரங்கல் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றன. தேனியில் ஸ்டேட் வங்கியிலிருந்து தொடங்கிய இரங்கல் பேரணிக்கு சிபிஐ தாலுகா செயலாளர் மொக்கமாயன் தலைமை வகித்தார். பின்னர் நேரு சிலை அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபி நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி. கண்ணன், கே.எஸ். ஆறுமுகம், தாலுகா செயலாளர் இ. தர்மர், சி.முருகன், சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர். நகரம் முழுவதும் பல் வேறு அமைப்புகள் பதாகைகள் அமைத்து அஞ்சலி செலுத்தின. ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய இரங்கல் ஊர்வலத்திற்கு ஒன்றிய செய லாளர் பிச்சைமணி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகிரி சாமி இரங்கல் உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன், ஒன்றிய செயலாளர் ராஜா ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செய லாளர் ராமர், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், நகர செயலா ளர் முனீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியகுளத்தில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்கு சிபிஐ தாலுகா செயலாளர் யூ. முஜிபூர் ரஹ்மான் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் எம். இராமச்சந்திரன் இரங்கல் உரையாற்றினார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எல். மூக்கையா, விசிக நிர்வாகி இரா. தமிழ்வாணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. வெண் மணி, தாலுகா செயலாளர் எம்.வி. முரு கன், காங்கிரஸ் தலைவர் கனகசீதா முரளி, திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், சிபிஐ தலைவர் காசி விசுவநாதன் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பேராசிரியர் முகம்மது ஷெரிப் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஏரியா குழு செயலா ளர் டி.கே. சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
