tamilnadu

img

புதிய நீதிமன்ற கட்டிடம் கோரி மேலூரில் கடையடைப்பு வணிகர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்

புதிய நீதிமன்ற கட்டிடம் கோரி மேலூரில் கடையடைப்பு வணிகர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை, பிப்.26- மேலூர் தாலுகா அலுவ லக வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றக் கட்டிடங்  கள் சுமார் 120 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையானவை. நீதிமன்ற பணிகள் நடைபெறும் நிலை யில் கட்டிடத்தின் மேற்கூரை கள் இடிந்து விழும் அபாயம்  இருப்பதாக கூறி, அடிப் படை வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றக் கட்டிடம் அமைக்க வேண்டும் என மேலூர் வழக்  கறிஞர் சங்கம் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனுக் கள் அளித்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12ஆம்  தேதி மேலூர் பேருந்து நிலை யம் முன்பு வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம் நடத்தி னர். 16ஆம் தேதி நீதிமன்றப்  பணிகளை புறக்கணித்து ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டமும் நடத்தி னர். 17ஆம் தேதி நீதி மன்றப் பணிகளை மீண்டும்  புறக்கணித்த வழக்கறிஞர்  கள், நீதிமன்றம் அமைந் துள்ள சாலையிலிருந்து பேருந்து நிலையம் வரை  மனித சங்கிலி போராட்டம்  நடத்தினர். தொடர்ந்து தாலுகா அலுவலகச் சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை–திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் (சூரக்குண்டு) நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், வழக்க றிஞர்களுக்கு ஆதரவாக மேலூரில் வர்த்தக சங்கத்தி னர் கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். நகைக்  கடைகள், ஜவுளிக் கடைகள்,  பாத்திரக் கடைகள், ஹோட் டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சினிமா பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இத னால் வர்த்தகம் பாதிக்கப்  பட்டு, முக்கிய சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சங்கத் தலைவர் திருமேனி, செய லாளர் சுரேந்திரன், பொருளா ளர் மேகவர்ணன், துணைச்  செயலாளர் ஞானசுந்தர பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பழ னிச்சாமி, வர்த்தக சங்கத்தி னர், மேலூர் முல்லைப்பெரி யாறு ஒருபோக பாசன விவ சாய சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், வாடகை வேன் மற்றும் கார் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்ற னர்.