tamilnadu

img

டைடல் நியோ பூங்காக்கள், சாலை மேம்பாலங்கள் ‘சேலத்தில் சிறைத்தியாகிகள் நினைவுத்தூண்-மண்டபம்’

டைடல் நியோ பூங்காக்கள், சாலை மேம்பாலங்கள் ‘சேலத்தில் சிறைத்தியாகிகள் நினைவுத்தூண்-மண்டபம்’

சென்னை, பிப். 26 - திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங் களில் மொத்தம் ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் டைடல் நியோ பூங்காக் களை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழ மை அடிக்கல் நாட்டினார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் திருநெல்வேலி மாவட் டம், ரெட்டியார்பட்டியில் ரூ. 39.06  கோடியிலும், விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் ரூ. 38.72 கோடியிலும், ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் ரூ. 39.87 கோடியிலும் இந்த மூன்று பூங்காக்கள் அமைக்கப்  படவுள்ளன. ஒவ்வொரு பூங்காவும் சுமார் 60,000 சதுர அடி பரப்பில் தரை  மற்றும் மூன்று தளங்கள் கொண்டு  கட்டப்படவுள்ளன. ஐடி, ஐடிஈஎஸ், பிபிஓ மற்றும் ஸ்டார்ட்-அப் நிறு வனங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காக்கள் தலா சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். டைடல் நியோ லிமிடெட் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் ஏற்கெனவே பூங்காக்கள் திறக்கப் பட்டு வெற்றிகரமாக இயங்கி வரு கின்றன. நாகர்கோவிலில் புதன்கிழமை முதல்வர் அடிக்கல் நாட்டினார். நாகப் பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விரைவில் கட்டு மானப் பணிகள் தொடங்கப்பட வுள்ளன. ரூ.2100 கோடியில் மேம்பாலம்  தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திரு வான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பா லம் அமைக்கும் பணிக்கு முதலமைச் சர் அடிக்கல் நாட்டினார்.  மேலும் பல்வேறு பணிகள் மதுரையில் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவுரைக் குழுமத்திற்காக அலு வலகம், ரூ.124.37 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள “குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைபின்னல் அமைப்பு 2.O”, ரூ.12.67 கோடியில் உருவாக்கப் பட்டுள்ள  டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பு,  முதலமைச்ச ரின் விபத்து நிவாரண நிதியுதவி திட்டத் தின் கீழ் நிவாரண நிதியுதவியை விரைவாக வழங்கும் பொருட்டு https://cmarf.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 53 மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை II) பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாள மாக அவர்களில் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.200.66 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக் கட்டு மற்றும் ரூ. 120.23 கோடியில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்தும் வகை யில் நிறைவேற்றப்பட்டுள்ள மறு கட்டுமானங்களையும் முத லமைச்சர் திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கட லூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திரு நெல்வேலி, தூத்துக்குடி திருவா ரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல்  மற்றும்  திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.4,712 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள சாலைகள் மற்றும் திருச்சி - கரூர் மாவட்டங்களில் ரூ. 101  கோடியே 37 லட்சம் செலவில் கட்டப் பட்ட பாலத்தை பொதுமக்களின் பயன் பாட்டுக்காக திறந்து வைத்தார்.  மயிலாடுதுறையில் ரூ. 113 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் புற வழிச் சாலை, மேலும், ரூ.248.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மற்றும் மாமல்ல புரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டடங்கள், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிய படிமக் கூடம் மற்றும் சிந்து வெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டினார். திருத்தணியில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மயி லாடுதுறையில் முன்சீப் வேதநாய கம் பட்டுக்கோட்டையில் தியாகி வை. நாடிமுத்து ஆகியோரது சிலை களையும் திறந்து வைத்தார். மேலும், சேலம் சிறையில் உயிர்நீத்த 22 தியாகி களின் நினைவுத் தூண் மண்ட பத்திற்கும் அடிக்கல் நாட்டினார். ரூ. 175 கோடியே 23 லட்சம் மதிப் பீட்டில் 16 கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.216 கோடியே 48 லட்சம் செல வில் 21 கோவில்களில் 46 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் எ.வ. வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.