tamilnadu

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை  பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, அக்.5 - சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ  ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு,  தருமபுரியில் ஞாயிறன்று நடைபெற்றது.  பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.நிர்மலா தேவி  சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.  வரவேற்புக் குழு தலைவர் மருத்துவர் க.பகத்சிங் வரவேற்றார். மாநிலச் செய லாளர் பி.பாலம்பிகா அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் எஸ்.மகாலட்சுமி, மாநிலப் பொரு ளாளர் பி.சாய் சித்ரா ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். மாநில நிர்வாகிகள் எஸ்.திலகவதி, எஸ்.ரபேக்கா, பி.லில்லி பாக்கியம், என்.ரேவதி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.  இம்மாநாட்டில், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். மாத ஊதியமாக  ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும். பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். சுகாதாரத் துறையில் வெளி  முகமை மூலம் பணி நியமனம் செய்யக்  கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத் தொடர்ந்து, சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொதுச் செயலாளராக எஸ்.மகாலட்சுமி, பொருளாளராக பி.சாய் சித்ரா, துணைத் தலைவர்களாக நிர்மலா தேவி, லில்லி பாக்கியம், கலைச் செல்வி, பிரேமா, விக்னேஸ்வரி, லோகேஸ்வரி, ரபேக்கா, துணைச் செய லாளர்களாக செல்வி, கிரிஜா, ரேவதி,  பாலாம்பிகா, திலகவதி, சுகன்யா உட்பட 26 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கே.கிரிஜா நன்றி கூறினார்.