tamilnadu

img

பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.1- சேதமடைந்து காணப்ப டும் அரசுப்பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி ஒன்றியத்திற்குட் பட்ட பண்டஅள்ளி கிராமத் தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகு தியைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட மாண வர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் சுற்றுச்சுவர் சிதில மடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள் ளது. நுழைவாயில் சுவர் உடைந்த நிலை யில் காணப்படுவதால், இரும்பு கதவை திறக்கும் பொழுது சுவர் இடிந்து விழும் ஆபத் தான சூழல் நிலவுகிறது. பள்ளி நேரங்களில் மாணவர்கள் வளாகத்தில் இருக்கும் பொழுது, சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கதவு விழுந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பருவமழை பெய்து வரும் நிலையில், சுற்றுச்சுவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், எந்த  நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே,  பள்ளியின் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.