tamilnadu

img

வேட்டைக்காரன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

வேட்டைக்காரன் இனத்தை மீண்டும்  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

திருவள்ளூர், செப். 14- தமிழ்நாட்டில் வசிக்கும் வேட்டைக்காரன் இன மக்களை மீண்டும் பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு ஞாயிறன்று (செப்.14) திருவள்ளூரில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் எம்.சேட்டு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.ஆறுமுகம் சங்க கொடி யை ஏற்றி வைத்தார். திருவள்ளூர் மாவட்டச் செய லாளர் க.ராஜா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணைச் செயலாளர் எஸ்.சின்னையா வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் மாநாட்டை தொடங்கி  வைத்தார். மாநில பொதுச் செயலாளர் இ.கங்கா துரை வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொரு ளாளர் ஜி.ஏழுமலை வரவு -செலவு அறிக்கை யை சமர்ப்பித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.சரவணன், திருவள் ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மானுட ஒற்றுமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநில துணைத் தலைவர் ஜி.விஜயா நன்றி கூறினார். தீர்மானங்கள் ஆதி பழங்குடி வேட்டைக்கார இனம் தமி ழகத்தில் 1961 ஆம் ஆண்டு வரை பழங்குடி யினர் பட்டியலில் இருந்து, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தற்போது வேட்டைக்காரன் இனம், பழங்குடி பட்டியலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வேட்டைக் காரன் இன மக்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நலத்திட்ட திட்டங்கள் பெற பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். குடிமனைப் பட்டாக்கள், தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். சுடுகாடு பாதை, குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநிலத் தலைவராக பி.லட்சுமணன், மாநில பொதுச் செயலாளராக இ.கங்காதுரை, பொருளாளராக சேட்டு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ஏ.கிருஷ்ணன், டி.ஆறுமுகம், வி.பரிமளா, ஏழுமலை, டி.டில்லி, துணைச் செயலாளர்களாக எஸ்.சின்னையா, சி.ரமேஷ், ஜி.விஜயா, மகாதேவன், ஜி.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.