சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெள்ளியன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள் ளது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீ சார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சுங்க தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கும் சோதனை நடைபெற்றது.
