tamilnadu

img

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை திறப்பு

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை திறப்பு

சென்னை, பிப். 5 - புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணர் அரங்கத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ண னின் உருவச்சிலை ஜி.என். செட்டி  சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-இல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.  இந்த இடத்தில் உள்ள கலை வாணரின் உருவச்சிலையை கலை வாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, சிலை புதுப்பிக்கப் பட்டு சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, கலைவாணரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மு.பெ. சுவாமிநாதன், தா.மோ. அன்பரசன், நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.