states

img

யுஎன்ஐ செய்தி நிறுவனம் மீதான அடக்குமுறைக்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்

யுஎன்ஐ செய்தி நிறுவனம் மீதான அடக்குமுறைக்கு  இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்

புதுதில்லி இந்தியாவின் மிகப்பழமை யான மற்றும் மதிப்புமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்  றான யுஎன்ஐ (UNI - United News of India) அலுவலகத்தை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்  துறை வலுக்கட்டாயமாக பூட்டி ‘சீல்’ வைத்துள்ளதற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. இந்நிலையில், இந்தியப் பத்தி ரிகை ஆசிரியர்கள் சங்கம் (எடிட்  டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா) யுஎன்ஐ  அலுவலகம் சீல் வைக்கப்பட்ட தற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்  ளது. இதுதொடர்பாக வெளியிட்  டுள்ள அறிக்கையில், “இந்தியா வின் பழமையான மற்றும் சுதந்திர மான செய்தி நிறுவனங்களில் ஒன்  றான யுனைடெட் நியூஸ் ஆப் இந்  தியா அமைந்திருந்த நில ஒதுக்  கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து  செய்தது. உயர்நீதிமன்ற உத்த ரவை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்பட்ட அவசரத்தையும், அள வுக்கு அதிகமான அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையையும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன் றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம்  மேம்பாட்டு அலுவலகம் அந்த  நிலத்தை மீண்டும் கையகப்படுத் திய விதம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை உயர்நீதிமன்றத்தின் உத்தர வைச் செயல்படுத்துவதை நாங்கள்  கேள்வி கேட்கவில்லை. ஆனால்  அந்த உத்தரவை நிறைவேற்றுவ தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததும், அதிகாரி களின் அப்பட்டமான படைபலக் காட்சியும் கவலையளிப்பதாக உள்  ளது. மார்ச் 20ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் நீதிமன்ற உத்த ரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்  கள் தெரிவிக்கின்றன. ஆனால் நீதி மன்ற இணையதளத்தில் உத்தரவு நகல் பதிவேற்றப்படுவதற்கு முன்  னரே, நூற்றுக்கணக்கான காவல்  துறையினர் மற்றும் துணை ராணு வப் படையினர் யுஎன்ஐ வளா கத்திற்கு வந்துள்ளனர். பணியில் இருந்த பெண் ஊழியர்கள் உள்  ளிட்ட பத்திரிகையாளர்கள் வலுக்  கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள் ளனர்.  தங்களுக்கு எந்தவித முன்னறி விப்பும் வழங்கப்படவில்லை என்றும், நிர்வாகத்தினர் வருவ தற்குக்கூட கால அவகாசம் அளிக் கப்படவில்லை என்றும் யுஎன்ஐ நிறுவன பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அலுவலகம் சீல் வைக்கப்படுவ தற்கு முன்பு அங்கிருந்த தங்க ளது தனிப்பட்ட பொருட்களைக் கூட எடுக்க அதிகாரிகள் அனும திக்கவில்லை என்றும் பத்திரிகை யாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது  சில பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் முரட்டுத்தன மாக நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது.  ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகாரிகளின் இந்த வேக மான நடவடிக்கையும், படைபலத் துடன் ஊடகங்களுக்கு ஒரு அச்ச மூட்டும் செய்தியை அனுப்பு கிறது. இந்த நடவடிக்கை யுஎன்ஐ  சந்தாதாரர்களுக்குச் செய்தி சென்ற டைவதைத் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, அந்த நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் அங்கு பணி புரியும் நூற்றுக்கணக்கான பத்தி ரிகையாளர்களின் வாழ்வாதாரத் தின் மீதும் நிழலைப் படரச் செய்துள்  ளது. ஜனநாயகத்தில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் இத்தகைய நட வடிக்கைகளைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் மிகுந்த நிதானத்து டன் செயல்படுமாறும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது” என அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.