india

img

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விமானப்படை ஊழியர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை ஊழியர் ராஜஸ்தான் புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் சாபுவா விமானப்படை நிலையத்தில் MTS ஆக பணியாற்றிய சுமித் குமார் (36), ரகசிய இராணுவ தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் நுண்ணறிவு அமைப்புகளுக்கு அனுப்பிள்ளார்.
2023 முதல் பணம் பெற்றுக்கொண்டு தகவல் கசியவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனமவரி மாதம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஜெய்சல்மேர் நபர் ஜபராராம் வழக்கில் தொடங்கிய புலனாய்வு விசாரணையில் சுமித் குமார் சிக்கியுள்ளார்.
மேலும் ராஜஸ்தான் நுண்ணறிவு பிரிவு மற்றும் விமானப்படை நுண்ணறிவு இணைந்து நடத்திய நடவடிக்கையில் அவர் சாபுவாவில் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் BNS, 2023 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.